இலங்கைக்கு கடனுதவி வழங்குவது குறித்த எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறும் முதல் பேச்சுவார்த்தையில் சீனா, இந்தியா, சவுதி அரேபியா மற்றும் ஏழு நாடுகளின் இனைந்த குழுவின் அதிகாரிகள் பங்கேற்பார்கள் என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
எத்தியோப்பியா, சாம்பியா, கானா ஆகிய வருமானம் இல்லாத நாடுகளின் அதிகாரிகளும் இலங்கை, ஈக்வடோர் போன்ற நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் அதிகாரிகளும் இதில் கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஎம்எப் தலைமையில், உலக வங்கி மற்றும் ஜி20 குழுவின் தற்போதைய தலைவரான இந்தியா ஆகியோரால் இணைந்து நடத்தப்படும் இந்த பேச்சுவார்த்தை 25 ஆம் திகதி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இருப்பினும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் வட்டமேசை கூட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர், மேலதிக விவரங்கள் எதிர்காலத்தில் வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.