Tuesday, November 26, 2024
HomeLatest Newsநாளாந்த செலவுகளுக்காக வெளிநாடுகளிடம் கடனை பெறும் நிலையில் இலங்கை!

நாளாந்த செலவுகளுக்காக வெளிநாடுகளிடம் கடனை பெறும் நிலையில் இலங்கை!

இலங்கையின் நாளாந்த செலவுகளை ஈடு செய்ய வெளிநாடுகளில் இருந்து சுமார் 600 கோடி ரூபாவை கடனாக பெற நேரிட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கையின் நாள் வருமானம் 400 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. நாட்டின் நாளாந்த செலவுகளுக்கு சுமார் ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது.

தேவைப்படும் தொகையை ஈடு செய்வதற்காக வெளிநாடுகளிடம் இருந்து 600 கோடி ரூபாவை கடனாக பெற வேண்டியுள்ளது.

இந்த நிலைமை காரணமாக இலங்கை ஏற்கனவே கடன் மற்றும் வட்டியை செலுத்த முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.

வேறு ஒரு அரசாங்கம் பதவிக்கு வந்தாலும் அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வதியம் ஆகியவற்றை செலுத்தியாக வேண்டும். இவை கட்டாயமான செலவுகள் எனவும் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக அத்தியவசிய உணவு பொருட்கள், எரிபொருள், மருந்து போன்றவற்றை இறக்குமதி செய்ய வெளிநாடுகளில் இருந்து கைமாற்று கடனை பெற வேண்டியுள்ளது.

இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளிடம் இருந்து இலங்கை அரசு கைமாற்று கடனாக டொலர்களை பெற்று வருகிறது. இந்தியாவின் இந்த கடனுதவியின் கீழ் தற்போது நாட்டிற்கு தேவையான எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.

Recent News