Thursday, January 23, 2025
HomeLatest Newsஉலகிலேயே ஒழுக்கமற்ற இராணுவம் என்றால் அது இலங்கை இராணுவம் தான்-கஜேந்திரன் எம்.பி ஆவேசம்!

உலகிலேயே ஒழுக்கமற்ற இராணுவம் என்றால் அது இலங்கை இராணுவம் தான்-கஜேந்திரன் எம்.பி ஆவேசம்!

மாவீரர்களை நினைவு கூறும் செயற்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு அதற்கான செயற்பாடுகள் முன்னெ டுக்கப்பட்டு வருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

சமூகம் ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

மாவீர்களை நினைவு கூறுகின்ற புனிதமான மாதம் இந்த மாதம், இம்மாதம் 27 ஆம் திகதி தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் அமைந்திருகக்கூடிய துயிலும் இல்லங்களிலும் மக்களுடைய வீடுகளிலும் மாவீரர்களுக்கு தீப சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தும் புனிதமான நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன.

அந்த வகையிலே மாவீரர்களின் நினைவிடம் தூய்மை படுத்தும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அத்தோடு அது சம்பந்தமான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. சில இடங்களில் இராணுவத்தினர் ஆக்கிரமிப்பு, இடையூறுகள் காணப்படுகிறது.

அவர்கள் இருக்கும் இடத்திற்கு முன்பாக மாவீரர்களின் நிகழ்வுகளை நடாத்த ஆயத்தமாகி வருகின்றோம். சில இடங்களில் மாவீரர்களின் நினைவுத் தூபிகள் காணப்பட்ட இடத்தை உடைத்து எடுத்து விட்டு அந்த இடத்தில் ராணுவ முகாம்களை அமைத்து அங்கு நிலை கொண்டிருப்பதை நாங்கள் காணக்கூடியதாக இருக்கின்றது.

உலகிலேயே ஒழுக்கம் அற்ற ராணுவ வீரர்கள் என்றால் அது இலங்கை இராணுவமாக தான் இருக்க முடியும். அந்த இராணுவ வீரர்கள் தான் இன்று வடக்கு கிழக்கில் எமது தாயக பூமியில் இன்று துயிலும் இல்லங்களில் தங்கி இருந்து எமது செயற்பாடுகளை செய்யவிடாமல் தடுத்து வருகின்றார்கள்.

எத்தனை தடைகள்,கெடுபிடிக்கள் வந்தாலும்,எது எவ்வாறாக இருந்தாலும் மாவீரர் நிகழ்வுகள் இடம் பெறும் துயிலும் இல்லங்களுக்கு செல்ல முடியாத சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட இடங்களை அன்மித்தவாறு எமது நிகழ்வுகளை முன்னெடுக்க உள்ளோம்.

துயிலும் இல்லங்களுக்கு கொடுக்க வேண்டிய வணக்கங்களை நாங்கள் அவ்விடத்தில் இருந்துj கொடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

அந்த வகையிலே கோப்பாய் வடமராட்சி கொடிகாமம், பருத்தித்துறை வீதியில் அமைந்திருக்கக் கூடிய துயிலும் இல்லத்திற்கு முன்பாகவும் இந்த ஏற்பாடுகள் நடைபெறவுள்ளது.

இதே போன்று ஏனைய வட கிழக்கு மாவட்டங்களிலும் இந்த ஏற்பாடுகளை செயல்படுத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதையும் குறிப்பிட்ட அவர் பொது மக்களாலும் மாவீரர் தின ஏற்பாட்டு குழுவினராலும் ஒழுங்கு செய்யப்பட்டு வருகின்றது.

நாங்களும் இந்த ஏற்பாட்டில் முழுமையாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம். அதேநேரம் இராணுவத்தினரின் நடவடிக்கைகள் மக்களை அச்சுறுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. அதையும் மீறி எமது மாவீரர்களுக்கு மரியாதை, வணக்கத்தை செலுத்துவதை எவராலும் தடுக்க முடியாது தடையின்றி நிகழ்வுகள் முன்னெடுக்கப்படும் நாங்கள் முன்னெடுத்து வருவோம் என்று தெரிவித்தார்.

பிற செய்திகள்

Recent News