Monday, January 27, 2025
HomeLatest NewsWorld Newsஇந்தியா – அமெரிக்க உறவில் பிளவு: கனடாவால் சிக்கல்

இந்தியா – அமெரிக்க உறவில் பிளவு: கனடாவால் சிக்கல்

கனடாவில் (Canada) கொல்லப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங்கின் மரணத்துக்கும் இந்தியாவுக்கும் தொடர்பு இருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்திருப்பதால் இந்தியாவுக்கும் ( India) அமெரிக்காவுக்கும் (America) இடையிலான உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.அண்மையில் அமெரிக்காவில் காலிஸ்தான் இயக்கத்தின் தலைவர் ஒருவரை கொல்ல ரோ அமைப்பு(RO) சதி செய்ததாக, கனடா பிரதமரின் அறிக்கையின் அடிப்படையில் அமெரிக்க Washington Post செய்தி சேவை செய்தி வெளியிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

இந்தியாவில் தனி சீக்கிய நாடு உருவாக்க முயற்சிப்பதாகக் கூறப்படும் காலிஸ்தான் இயக்கத்தின் சட்ட ஆலோசகரும், செய்தித் தொடர்பாளருமான குர்பத்வந்த் சிங் பண்ணும், நியூயார்க்கில் உள்ள அவரது வீட்டின் முன்பும், ரோ அமைப்பினரையும் கொல்ல இந்திய ரோ அமைப்பு சதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.அதற்காக ஒரு வாடகை கொலையாளியின் உதவியை கோரியுள்ளதாக அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் செய்தி சேவையும் இந்திய தொழிலதிபர் நிகில் குப்தாவிடம் கூறியுள்ளது.

இந்த அறிக்கையை இந்திய வெளிவிவகார அமைச்சு கடுமையாக நிராகரித்துள்ளதுடன், அறிக்கையை விசாரிக்க உயர்மட்ட குழுவை நியமிக்க இந்திய வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.குறித்த அறிக்கை இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதால் விசாரணை தொடர்பான அமெரிக்க தகவல்களை பெற இந்திய வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதற்கிடையில், தற்போது செக் குடியரசின் காவலில் உள்ள நிகில் குப்தா அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Recent News