Wednesday, December 25, 2024
HomeLatest Newsகாலிமுகத்திடல் பகுதியில் விசேட பொலிஸ் பாதுகாப்பு!

காலிமுகத்திடல் பகுதியில் விசேட பொலிஸ் பாதுகாப்பு!

காலிமுகத்திடல் போராட்டகளம் பகுதியில் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹல் தல்துவ தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் இராணுவத்தினர் குறித்த பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Recent News