Tuesday, December 24, 2024
HomeLatest Newsகடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு

கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு

எதிர்வரும் ஜனவரி மாத போயா தினத்தன்று குடிவரவு குடியகல்வு திணைக்களம் மூடப்படவுள்ளது.

அன்றைய தினத்தில் கடவுச்சீட்டை பெற்றக்கொள்வதற்காக தவறுதலான முறையில் சிலருக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனால் ஜனவரி மாதம் 6ஆம் திகதி போயா தினத்தன்று சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக தலைமையகத்துக்கு வருகை தர வேண்டாம் என்று திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அதிகளவான இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்புக்காக அதிகளவில் வெளிநாடு செல்கின்றனர்.

இதன் காரணமாக கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலையில், முன்கூட்டியே திகதியை வழங்கும் நடைமுறையை குடிவரவு குடியகல்வு திணைக்களம் அமுல்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Recent News