Wednesday, December 25, 2024
HomeLatest Newsடீசல் கப்பல் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட விசேட அறிவிப்பு

டீசல் கப்பல் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட விசேட அறிவிப்பு

40,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று இன்று சனிக்கிழமை காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

சோதனைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார்.

இதனை அடுத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு உடனடியாக டீசல் விநியோகிக்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, மற்றுமொரு டீசல் கப்பல் இன்று பிற்பகல் நாட்டை வந்தடையும் என்றும் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 19ஆம் திகதிக்குள் பெட்ரோல் கப்பலும் வரவுள்ளதாக கூறினார்.

இந்த 03 கப்பல்களுக்கும் பணம் செலுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Recent News