Thursday, December 26, 2024
HomeLatest Newsபிரித்தானிய மக்களுக்கு விசேட அறிவிப்பு

பிரித்தானிய மக்களுக்கு விசேட அறிவிப்பு

அடுத்த வாரம் இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்தில் இலையுதிர்கால கோவிட் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பராமரிப்பு இல்லத்தில் வசிப்பவர்களுக்கு இந்த கோவிட் பூஸ்டர் தடுப்பூசியில் முதலுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய்த்தொற்றுகள் வீழ்ச்சியடைந்தாலும், இந்த இலையுதிர் மற்றும் குளிர்காலத்தில் கோவிட் மற்றும் காய்ச்சல் மீண்டும் எழும் என்று சுகாதார அதிகாரிகள் கணித்துள்ளனர். இந்த நிலையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டுக்கும் அதிகமான தடுப்பூசிகளைப் பெறுவதன் மூலம் கடுமையான நோயிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தகுதியுள்ளவர்களை சுகாதார அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

ஒமிக்ரோன் மாறுபாட்டிற்கு எதிராக சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி முதலில் பயன்படுத்தப்படும்.

இருப்பினும், 50 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் பாதுகாக்க மொடர்னாவின் ‘பைவலன்ட்’ தடுப்பூசி போதுமானதாக இல்லை. எனவே மக்கள் எந்த ஊக்கியாக இருந்தாலும் அதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். இவை வசந்த காலத்தில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகளாக இருக்கும்.

Recent News