சுமார் 50,000 வாடிக்கையாளர்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக நீர் கட்டணத்தை செலுத்தாமல் இருப்பதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பியல் பத்மநாத இதுகுறித்து மேலும் தெரிவிக்கையில்,
50,000 வாடிக்கையாளர்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக நீர் கட்டணத்தை செலுத்தாமல் உள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் 532 மில்லியன் ரூபாய்கள் வசூலிக்கப்பட வேண்டியுள்ளது .
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையியிலிருந்து 2.8 மில்லியன் நீர் இணைப்புகள் மூலம் நீர் விநியோகிக்கப்படுகிறது. அவற்றில் 69% வீடுகள் மற்றும் 16% வணிக நிறுவனங்கள், 9% அரசு நிறுவனங்கள் ஆகும்.
இதுவரை கட்டணத்தை செலுத்த தவறிய நுகர்வோர் 14 நாட்களுக்குள் தங்கள் கட்டணத்தை செலுத்தினால், அவர்களுக்கு 1.5% தள்ளுபடி கிடைக்கும்.
தற்போதைய சூழ்நிலையில் தண்ணீர் விநியோக செலவு அதிகரித்துள்ளது.
அதேவேளை மின்சாரம், எரிபொருள் மற்றும் இரசாயனப் பொருட்களின் விலையேற்றமே இதற்குக் காரணம். தற்போது ஒரு யூனிட் தண்ணீர் தயாரிக்க 50 முதல் 60 ரூபாய் வரை செலவாகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.