Saturday, January 18, 2025
HomeLatest Newsகல்வி அமைச்சின் விசேட அறிவித்தல்

கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல்

கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சைக்காக எதிர்வரும் 20ஆம் திகதி விடுமுறை வழங்கப்படுகின்ற சகல பாடசாலைகளும் ஜூன் மாதம் 20ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சை திட்டமிட்டவாறு எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைய விண்ணப்பதாரிகளுக்கான அனுமதி அட்டை மற்றும் பரீட்சை நிலையங்களுக்கு வினாத்தாள்களை பகிர்ந்தளிக்கும் செயற்பாடு தற்போது முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பரீட்சைக்கு தேவையான கண்காணிப்பு பணிக்குழாமினரும் தயார்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும், இந்த முறை நடத்தப்படவுள்ள கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சை தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இவ்வாறான கருத்தை விடுத்துள்ளார்.

Recent News