Tuesday, December 24, 2024
HomeLatest Newsகர்ப்பிணி தாய்மார்களுக்கு மருத்துவ நிபுணர்களின் விசேட அறிவித்தல்!

கர்ப்பிணி தாய்மார்களுக்கு மருத்துவ நிபுணர்களின் விசேட அறிவித்தல்!

நாட்டில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு விசேட அறிவுறுத்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாட்டு பிரச்சினை காரணமாக, பிரசவவலி உச்சமடையும் வரையில் காத்திருக்க வேண்டாம் என மகப்பேற்று மருத்துவ நிபுணர்கள் கோரியுள்ளனர்.

எரிபொருள் பிரச்சினையினால் தாய் ஒருவர் நேற்றைய தினம் தனது மூன்றாவது குழந்தையை வீட்டிலேயே பிரசவித்த சம்பவமொன்று நிக்கவரட்டிய பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

எனவே பிரசவவலி ஏற்படும் அறிகுறிகள் தென்படும்போதே வைத்தியசாலையில் சேர்வதற்கு கர்ப்பிணி தாய்மார்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News