Sunday, January 26, 2025
HomeLatest Newsமே தினத்தை முன்னிட்டு விசேட கூட்டம்..!

மே தினத்தை முன்னிட்டு விசேட கூட்டம்..!

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு விசேட மே தின கூட்டமொன்றை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய தொழிற்சங்க பிரதிநிதிகள், வரி விதிப்பு உள்ளிட்ட தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் இன்றுவரை ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகளை வழங்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்கள்.

அரச ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் இதுவரை நேரடியாக தலையிடவில்லை எனவும் இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் பொறியியலாளர் நிஹால் வீரரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்கவும் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recent News