Thursday, January 23, 2025
HomeLatest Newsயாழில் வெள்ள நிலைமைகளை துரிதமாக கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை- அரசாங்க அதிபர் கருத்து

யாழில் வெள்ள நிலைமைகளை துரிதமாக கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை- அரசாங்க அதிபர் கருத்து

யாழில் இன்றைய தினம் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பிலான கலந்துரையாடல் நிகழ்வு யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றிருந்தது.

இதனை அடுத்து இது தொடர்பாக யாழ்.மாவட்ட அரச அதிபர் மகேசன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

அவர் தெரிவித்ததாவது ;

தற்போது  சில இடஙக்ளில் தொடர்ந்து வெள்ள நிலைமைகளை எதிர்பார்ப்பாக்கப்படுகிறது. இந்த வருடம் நாவாந்துறையில் வெள்ளப்பெருக்கினை நாங்கள் கட்டுப்படுத்தியிருக்கிறோம். இதற்கு சுமார் 20 மில்லியன் ரூபா செலவழிக்கப்பட்டிருந்தன.ஆனால் தற்போது பொருளாதார நெருக்கடி காரணமாக பாரிய செயற்திட்டங்களை உடனடியாக செயற்படுத்த முடியாமல் இருக்கின்றன.

இருந்த போதிலும் குறுங்கால செயற்திட்டத்தினை அதாவது செயற்படுத்தக்கூடிய செயற்திட்டங்களை செயற்படுத்த இருக்கின்றோம்.நீண்ட கால மற்றும் நடுத்தர திட்டங்களை உடனடியாக செயற்படுத்த முடியாது என்பதனையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.மாற்று வழிமுறைகளை எடுக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.

குறுங்கால திட்டம்,மற்றும் இடைக்கால திட்டங்களை வகுக்கும்படி இங்கு கேட்டுக்கொண்டதுக்கமைய ,வெள்ள நிலைமைகளில் இருந்து மக்களை பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைககளை துரிதமாக எடுப்பதற்கு பிரதேச மட்ட இடர்க்குழு  கூட்டங்கள் ஊடாக நடவடிக்கைகளை எடுப்பதற்கு சில தீர்மானங்களை எடுக்கப்பட்டுள்ளன.

இடர்கால நிலைமை ஏற்பட்டால் எவ்வாறு சமாளிப்பது? பாதுகாப்பான இடங்களுக்கு மக்களை எவ்வாறு அகற்றுவது?,எதிர்காலத்தில் அவ்வாறான நிலைமைகள் ஏற்பட்டால் அதற்கான நிவாரண பணிகளை துரிதமாக மேற்கொள்வது ,அதற்கான வளங்களை பெற்றுக்கொள்வது போன்ற விடயங்களும் கலந்துரையப்பட்டன.

எனவே இதனை எங்கள் மாவட்ட மட்டத்திலே தொடர்புடைய திணைக்களங்கள் ,முப்படை,பொலிஸார் ஆகியோருடன் இணைந்து எந்தவகையில் திட்டங்களை முன்னெடுப்பது குறித்தும்,எங்களுடைய இடர் முகாமைத்துவ நிலையம் எவ்வாறு அதனை ஒருங்கிணைத்து செயற்படுத்துவது பற்றியும் தீர்மானித்திருக்கின்றோம் இந்த விடயம் ஒரு கூட்டடாக செயற்பட்டால் எங்கள் மாவட்டத்தில் ஏற்படுகின்ற வெள்ள நிலைமைகளை கட்டுப்படுத்தி,மக்களுக்கு நிவாரண நடவடிக்கைளை துரிதமாக மேற்கொள்ள முடியம்.இதனை முற்பாதுகாப்பு செயற்திட்டமாக செயற்படுத்துவதற்கு இருக்கின்றோம்.என்றார்.

பிற செய்திகள்

Recent News