Monday, January 20, 2025
HomeLatest Newsஅரசமைப்பின் 21வது திருத்தம் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று!

அரசமைப்பின் 21வது திருத்தம் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று!

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இன்று நடைபெறவுள்ளது.

பிரதமர் தலைமையில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் இந்தக் கலந்துரையாடல் இன்று மாலை 4.00 மணிக்கு பிரதமர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.

இதில் கலந்துகொள்ளுமாறு நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டத்தை அமைச்சரவையில் அண்மையில் சமர்ப்பித்தார்.

உரிய திருத்தத்திற்கு கட்சிகளின் சம்மதத்தைப் பெறுவது அவசியமானதனால் முதலில் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடுவதற்கு முன்மொழியப்பட்டது.

அரசியலமைப்பின் 21வது திருத்தம் ஏற்கனவே அனைத்து தரப்பினருக்கும் வழங்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்நிலையில், 21வது திருத்தம் தொடர்பாக கட்சித் தலைவர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் இந்தக் கூட்டத்தில் ஆராயப்படும் என அவர் தெரிவித்தார்.

பெறப்பட்ட யோசனைகள் மற்றும் முன்மொழிவுகள் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

உரிய தீர்மானங்கள் உள்ளடக்கப்பட்டதை அடுத்து, அரசியலமைப்பின் 21வது திருத்தம் எதிர்வரும் திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு பின்னர் விரைவில் நிறைவேற்றப்படவுள்ளது.

Recent News