Thursday, January 23, 2025
HomeLatest Newsசிவனொளிபாதமலை பருவகால யாத்திரை தொடர்பில் விசேட அறிவிப்பு!

சிவனொளிபாதமலை பருவகால யாத்திரை தொடர்பில் விசேட அறிவிப்பு!

2022- 2023ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை பருவகாலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் பௌர்ணமி தினத்தில் ஆரம்பிக்கப்பட்டவுள்ளதாக பெல்மதுளை ரஜமகாவிகாரை, இரத்தினபுரி பொத்குல் விகாரை விகராதிபதி வெங்கமுவ ஸ்ரீ தம்மதின்ன தேரர் தெரிவித்துள்ளார்.

பருவகாலம் ஆரம்பிப்பது தொடர்பாக அரச அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் ஸ்ரீபாத நல்லத்தண்ணி கிராமசேவகர் காரியாலய கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலகொட தலைமையில் இடம்பெற்ற இச்சந்திப்பில், தேரர் மேலும் தெரிவித்ததாவது,..

பெல்மதுளை கல்கொத்தாவ ரஜ மகா விகாரையில் பதிவு படுத்தப்பட்டுள்ள சம்ன்தேவ ஆலயப் பொருட்கள் மற்றும் பூஜைக்குத் தேவையான பொருட்கள் என்பன டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி குறித்த விகாரையில் இருந்து வெளியில் எடுக்கப்படும். பின்னர் 6ஆம் திகதி குறித்த பெட்டி வீதி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு சிவனொளிபாத மலை உச்சியில் பிரதிஷ்டை செய்யப்படும். இரத்தினபுரி வீதி, இரத்தினபுரி அவிசாவளை வீதி , பெல்மதுளை – பலாங்கொடை – பொகவந்தலாவை வீதி வழியாக கொண்டு செல்லப்படும். பலாங்கொடை – பொகவந்தலாவை வீதி, நோட்டன் பிரிட்ஜ் வழியாக நல்லத்தண்ணி வீதி திருத்தப்படாதுள்ளதால் அதனை திருத்தித் தருமாறு உரிய அதிகாரிகளை விகாராதிபதி கேட்டுக் கொண்டார்.

பிற செய்திகள்

Recent News