சீனாவானது 2023 ஆம் ஆண்டிற்குள் நிலவிற்கு மனிதர்களை அனுப்பவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சீனா கடந்த காலங்களில் சந்திரன் மற்றும் செவ்வாய் கோளுக்கு ரோவரை வெற்றிகரமாக அனுப்பியுள்ளது.
அது மட்டுமன்றி, 2021 ஆம் ஆண்டு சீனாவும், ரஷ்யாவும் சர்வதேச சந்திர ஆராய்ச்சி நிலையத்தை அமைக்கும் திட்டத்தை அறிவித்திருந்தன.
இவ்வாறாக விண்வெளி போட்டிகள் தற்போது தீவிரம் அடைந்து வரும் நிலையில் வரவுள்ள 2030 ஆம் ஆண்டிற்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதற்கு சீனா திட்டமிட்டுள்ளது.
அதன் மூலம் மனிதர்களை நிலவில் தரை இறக்குவது, நிலவினை ஆய்வு செய்தல் மற்றும் அது தொடர்பான தொழில்நுட்ப பரிசோதனைகளை மேற்கொள்வதே தனது இலக்கு என்றும் சீனா கூறியுள்ளது.