அமெரிக்காவில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக பற்றரி மற்றும் முழுமையான மின்சாரத்தில் இயங்கக் கூடிய வானங்கள் அதிகளவில் விற்பனையாகின்ற சூழல் காணப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் மேற்படி மின்சார வானகங்களுக்கான சேமிப்பு கலங்கள் மற்றும் மின்சார பொறிமுறை இயந்திரங்கள் என்பவற்றை வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி செய்தல் தொடர்பான தொழிநுட்ப ரீதியான உதவிகளுக்காக தென்கொரியாவின் “பவர் ஹன்டர்ஸ் வில்லி” என்னும் நிறுவனம் சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த முதலீடு மூலமாக அமெரிக்க உற்பத்திகளை தென்கொரியாவிற்கு இறக்குமதி செய்ய முடியும் எனவும் அமெரிக்காவின் உற்பத்திகளை தென் ஆசியாவிற்குள் பரப்புவதற்கு தென் கொரியா அமெரிக்காவிற்கு கிடைத்துள்ள விற்பனை பிரதிநிதி என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.