தென் சீனக் கடலில் உள்ள பிரச்சினைகளை அமைதியான முறையில் தீர்க்க இந்தியா அழைப்பு விடுத்துள்ளதுடன், சர்வதேச சட்டங்களை கடைபிடிக்குமாறு சீனாவை வலியுறுத்தியுள்ளது.
தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் விநியோக படகைத் தடுக்க சீனாவின் கடலோர காவல்படை நீர் பீரங்கியைப் பயன்படுத்திய பின்னர் இந்த அறிக்கை வந்துள்ளது.
விதிகள் அடிப்படையிலான ஒழுங்கைப் பின்பற்றி சர்ச்சைகளை அமைதியாக தீர்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை இந்தியா வலியுறுத்தியது.
சீனா அதன் கப்பல்களுக்கு எதிராக சட்டவிரோதமாக நீர் பீரங்கிகளைப் பயன்படுத்தியதாக அண்மையில் பிலிப்பைன்ஸ் குற்றம் சாட்டியது. இதற்கு பதிலளித்த சீனா, பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படை தனது கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக குற்றம் சாட்டியது.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட சர்வதேச சமூகம் சீனாவின் நடவடிக்கைகளை விமர்சித்தது. இந்த நிலைமைகளுக்கு மத்தியில் இந்தியாவின் இந்த அறிவிப்பு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.