Friday, November 15, 2024
HomeLatest Newsஉக்ரேன் - ரஷ்யா போரை நிறுத்த ரஷிய அதிபரிடம் தென்னாபிரிக்கா அதிபர் வலியுறுத்தல்....!

உக்ரேன் – ரஷ்யா போரை நிறுத்த ரஷிய அதிபரிடம் தென்னாபிரிக்கா அதிபர் வலியுறுத்தல்….!

உக்ரேன் – ரஷ்யாக்கிடையிலான போர் ஒன்றரை வருடமாக நீடித்து வரும் நிலையி்ல் போரை முடிவுக்குக் கொண்டுவர ஆபிரிக்கா அமைதி இயக்கம் என்ற பெயரில் தென்னாபிரிக்கா அரசு முயற்சித்து வருகின்றது.

இதேவேளை தென்னாபிரிக்கா , எகிப்து , செனகல் , காங்கோ – பிராசாவில்லி , கொமுமா ரோஸ் , ஜாம்பியா மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட .குழுவானது
தென்னாபிரி்க்கா ஜனாதிபதி தலைமையில் அந் நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளது.

இந் நிலையி்ல் ஆபிரிக்கா குழுடினர் ரஷியாவிற்குச் சென்று செமின்ட் பீட்டர்பர்க் நகரில் தென்னாபிரிக்கா அதிபர் சிரில் ரமபோசாவை ரஷ்ய அதிபர் புடினை சந்தித்துப் பேசிய போது புடினிடம் போரை முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்தப்பட்டது.

இதேவேளை போரால் ஆபிரிக்கா கண்டம் முழுவதும ஏராளமான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன் உலகளவிலும் பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன.

இச் சந்தி்பில் பதிலளித்த ரஷ்ய அதிபர் ; உக்ரைன் தான் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைக்கு மறுத்து வருவதாகச் சுட்டிக்காட்டினார்

Recent News