தென்னாபிரிக்காவின் அதிபர் ‘சிரில் ராமபோசா’விற்கு வெள்ளைமாளிகைக்கு வரும் படி அதிபர் பைடன் அழைப்பு விடுத்திருந்தார்.
இதின் படி இருவருக்குமிடையிலான நேரடி சந்திப்பொன்று நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் பல விடயங்கள் குறித்து அமெரிக்க அதிபர் பைடன் கலந்துரையாடியுள்ளதாகவும், குறிப்பாக வர்த்தகம், காலநிலை மாற்றம், சுகாதாரம், உணவு மற்றும் பாதுகாப்பு போன்ற விடயங்கள் குறித்து தென்னாபிரிக்க அதிபரிடம் கேட்டறிந்து கொண்டதுடன் எதிர்கால திட்டங்கள் குறித்தும் விரிவான கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் தென்னாபிரிக்காவுடன் பல கூட்டு செயற் திட்டங்களை மேற்கொள்ள தாம் ஆர்வமாக இருப்பதாகவும் அதிபர் பைடன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹரிஸ் அவர்களையும் அதிபர் சிரில் ராமபோசா சந்தித்து தென்னாபிரிக்காவில் பெண்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்த கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த முக்கிய சந்திப்பு மூடிய அறையினுள்ளே நடைபெற்றதாகவும் ஊடகவியலாளர்கள் எவரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.