Friday, December 27, 2024
HomeLatest NewsIndia Newsதந்தையின் விபரீத முடிவை வீடியோ எடுத்த மகன்...!

தந்தையின் விபரீத முடிவை வீடியோ எடுத்த மகன்…!

தந்தை தவறான முடிவெடுத்து உயிரமாய்ப்பதை 4 வயது மகன் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இச்சம்பவம் கடப்பா நகரில் உள்ள சிலக்கலபவி என்ற பகுதியில் இந்த நடந்துள்ளது.

ஷேக் ஜமால் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மனைவி குவைத்தில் வசித்து வந்த நிலையில் தனது 3 மகள்கள் மற்றும் 4 வயது மகனுடன் வசித்து வந்துள்ளார்.

ஓராண்டுக்கு முன்னர் அவரது தந்தை மாதர் சாஹேப் உயிரிழந்ததில் இருந்து அவர் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் சம்பவ தினத்தன்று ஷேக் ஜமால் தனது மகனை அழைத்து, தான் உயிரமாய்ப்பதை செல்போனில் படமாக்கும் படி கூறியுள்ளார். அவர் கூறியபடியே 4 வயது மகனும் தந்தை உயிரமாய்ப்பதை வீடியோ எடுத்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணையை முன்னெடுத்து செல்ல, இந்த வீடியோ முக்கிய ஆதாரமாக இருக்கும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளார்.

Recent News