Tuesday, December 24, 2024
HomeLatest Newsயாழில் இப்படியும் சில மனிதர்கள்;வாழும் மனிதாபிமானம்!(படங்கள் இணைப்பு)

யாழில் இப்படியும் சில மனிதர்கள்;வாழும் மனிதாபிமானம்!(படங்கள் இணைப்பு)

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்கள் தினமும் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் தொடர்ச்சியான விலை அதிகரிப்பால் குடும்பஸ்தர்கள் வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் யாழ்ப்பாணம் சாவகச்சேரிப் பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு முன்னால் சிறு கொள்கலனில் அரிசியை காட்சிப்படுத்தி இன்றைய உணவுக்கு அரிசி இல்லாமல் வருந்தும் உறவுகள் இதிலிருந்து எடுத்துச் செல்லலாம் என அறிவித்தலை காட்சிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் தற்போதைய சூழலை தமக்கு சாதகமாக பயன்படுத்தும் ஒரு சில வர்த்தகர்கள் தமது விருப்பத்திற்கேற்றவாறு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரித்து விற்பனை செய்து வரும் நிலையில் அரிசி இல்லாமல் இருப்பவர்களுக்கு அரிசி வழங்க இவர் எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பில் அனைவரும் குறித்த வர்த்தகருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Recent News