Thursday, January 23, 2025

பெண்ணின் மார்பங்களிற்குள் மறைந்திருந்த பாம்புகள்..!அதிர்ச்சி சம்பவம்..!

பெண்ணொருவர் தனது மார்பகங்களிற்குள் ஐந்து பாம்புகளை மறைத்து வைத்து கடத்துவதற்கு முயன்ற வேளை கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

அந்நாட்டின், குவாங்டாங் மாகாணத்திலுள்ள ஃபுக்சியன் துறைமுகத்தில் இருந்து ஹொங்கொங்கிற்கு செல்ல முயன்ற போதே ஷென்சென் சுங்க அதிகாரிகளால் அந்த பெண் கைது செய்யப்பட்டார்.

அந்தவகையில், ஃபுக்சியன் துறைமுகத்தின் நுழைவு வாயிலில் நுழைந்த பெண்ணொருவர் வினோதமான உடல் வடிவத்துடன் இருப்பதை சுங்க அதிகாரிகள் கவனித்துள்ளனர்.

இதனால், அந்த பெண்ணை சுங்க அதிகாரிகள் சோதனையிட்ட போது ​​​​அவரது மார்பில் 5 உயிருள்ள பாம்புகள் மறைந்திருப்பதைக் கண்டுபிடித்துள்ளதுடன் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த பெண்ணின் அடையாளம் பகிரங்கப்படுத்தப்படாத போதிலும் அவர் உரிய மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அது மட்டுமன்றி, அந்த ஐந்து பாம்புகளையும் உரிய அதிகாரிகளிடம் கையளிக்க சுங்க அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest Videos