Thursday, January 23, 2025
HomeLatest Newsஉப்பை விட சிறியது..!பல லட்சம் ரூபாய்க்கு ஏலம் போன மைக்ரோ கைப் பை..!

உப்பை விட சிறியது..!பல லட்சம் ரூபாய்க்கு ஏலம் போன மைக்ரோ கைப் பை..!

சிறிய கைப் பை ஒன்று பல லட்சம் ரூபாய்க்கு ஏலம் போய்யுள்ளமை அனைவரையும் திகைப்படைய வைத்துள்ளது.

அதாவது, கல் உப்பையும் விட சிறியதும், 0.03 அங்குலத்திற்கும் குறைவான அளவில் உள்ள ஒரு கைப் பையே இவ்வாறு ஏலம் விடப்பட்டுள்ளது.

இந்த மைக்ரோ கைப் பையை லூயி வுட்டான் என்ற லக்சரி பிராண்ட் நிறுவனமே தயாரித்துள்ளது.

அத்துடன், இந்த மைக்ரோ கைப் பையானது ஆன்லைனில் ஏலம் விடப்பட்டுள்ள நிலையில் அது 51 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போய்யுள்ளது.

இந்நிலையில், குறித்த மைக்ரோ கைப்பை ஏலத்தில் வாங்கியவர் எளிதில் பார்ப்பதற்காக ஒரு மைக்ரோஸ்கோப்பையும் அந்த நிறுவனம் வழங்கியுள்ளது.

இதையடுத்து குறித்த விடயம் இது இணையதளத்தில் பரவி வைரலாகியுள்ளதுடன் அனைவரையும் திகைப்படைய வைத்துள்ளது.

Recent News