Wednesday, December 25, 2024
HomeLatest Newsவெசாக்கை முன்னிட்டு களை கட்டவுள்ள சிலாபம்-வெளியான அறிவிப்பு..!

வெசாக்கை முன்னிட்டு களை கட்டவுள்ள சிலாபம்-வெளியான அறிவிப்பு..!

இந்த வருடத்திற்கான தேசிய வெசாக் விழாவினை சிலாபத்தில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சிலாபம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கெபல்லாவல்ல ஸ்ரீ ரதனசிறி பிரிவென் விகாரை ஆலயத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

இதனை, புத்தசாசன, சமய அலுவல்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன தெரிவித்துள்ளார்.

வெசாக் வாரத்தை முன்னிட்டு மே மாதம் 2 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் பல சமய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recent News