இஸ்லாமபாத் பாகிஸ்தானில் இஸ்லாமிய மதத்திற்கு எதிரான துவேஷ கருத்துக்களை பரப்பிய கிறிஸ்தவ இளைஞர்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்துள்ளது.
பாகிஸ்தான் லாகூரில் இருந்து 400 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள பஹ்வல்பூர் பகுதியைச் சேர்ந்த நவுமன் மாசிஹ் என்ற கிறிஸ்தவ இளைஞன் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் வட்சப் வலைத்தளமூடாக இஸ்லாம் மதத்திற்கெதிரான கருத்துக்களைப் பகிர்ந்திருந்தார்.
இதனையடுத்து அந் நாட்டு பொலிசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றில் விசாரணைகள் நடாத்தப்பட்டு இவர் மீதான குற்றச்சாட்டு ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
இந் நிலையில் நேற்று முன்தினம் இந்த வழக்கின் தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் 20000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.