Friday, November 15, 2024
HomeLatest Newsநாட்டில் கோதுமை மாவுக்குத் தட்டுப்பாடு!

நாட்டில் கோதுமை மாவுக்குத் தட்டுப்பாடு!

நாட்டில் கடுமையான கோதுமை மா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாககூறப்படுகின்றது.

பேக்கரி உற்பத்திப் பொருட்களுக்கு கோதுமை மா பயன்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது கோதுமை மாவுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகின்றது.

எரிபொருள் நெருக்கடியால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.

மேலும்,திருகோணமலையிலிருந்து கொழும்புக்கு 50 கிலோகிராம் கோதுமை மா மூடையை கொண்டு செல்லும் போது ஒரு மூடைக்கு 300 ரூபா மேலதிகமாக அறவிடப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

திருகோணமலையில், இருந்து மருதானைக்கு கடந்த காலங்களில் தொடருந்தில் கோதுமை மா கொண்டு செல்லப்பட்டதாகவும், தற்போது தொடருந்தில் கோதுமை மா கொண்டு செல்வது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Recent News