அமெரிக்காவின் யு.எஸ். கேப்பிட்டோல் போலீஸ் படை அலுவலகத்தில் உள்ள 911 என்ற அவசர எண்ணிற்கு வந்த அழைப்பு ஒன்றில் அமெரிக்காவின் செனட் சபை கட்டட வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடக்கப் போவதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செனட் கட்டட வளாகத்தில் சோதனை நடத்தினர்.
எந்நேரமும் துப்பாக்கிச்சூடு நடக்கலாம் என கூறப்பட்டதால் அங்கு பதற்றமும் பரபரப்பும் காணப்பட்டது.
போலீசார் நடத்திய சோதனையில் எந்த ஆயுதமும், யாரும் சிக்கவில்லை. இறுதியில் தொலைபேசியில் வந்த மிரட்டல் புரளி என தெரியவந்துள்ளது.