அமெரிக்காவின் தெற்கு மாகாணமான வடக்கு கரோலினாவில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
காவல்துறை அதிகாரி ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு கரோலினாவில் உள்ள ராலே நகரத்தில் நேற்று மாலை 5 மணியளவில் பொதுமக்களை நோக்கி இனந்தெரியாத நபரொருவர் திடீரென சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச்சென்றார்.
எனினும் காவல்துறையினரின் தீவிர நடவடிகையால், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் சந்தேகநபர் அப்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டு அங்குள்ள குடியிருப்பு ஒன்றினுள் அடைக்கப்பட்டார்.
இந்தத் தாக்குதலில் காயமடைந்த காவல்துறை அதிகாரியொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவரது உடல் நிலை ஆபத்தான கட்டத்தின் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்த சில காலங்களில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
கடந்த ஆண்டில் மாத்திரம் 49,000 பேர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர். அதன்படி, சராசரியாக நாளொன்றில் 130க்கும் மேற்பட்டோர் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களால் உயிரிழந்தனர் என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.