Tuesday, December 24, 2024
HomeLatest Newsகோட்டாவின் பாதுகாப்பு தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்

கோட்டாவின் பாதுகாப்பு தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்

முன்னாள் அதிபர் கோட்டபாயவின் பாதுகாப்பிற்காக உயர்மட்ட பாதுகாப்பு திணைக்களத்தின் 226 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி தலதா அத்துகோரள தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்தநாட்டில் நடந்த பல விடயங்களுக்குக் காரணமான முன்னாள் அதிபரின் பாதுகாப்பிற்காக காவல்துறை திணைக்களம் 226 பேரை பயன்படுத்தியுள்ளதாகத் தெரிவித்த அவர், இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

முன்னாள் அதிபரின் பாதுகாப்பிற்காக 6000 உயரடுக்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அதிக எண்ணிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Recent News