Thursday, January 23, 2025
HomeLatest Newsகையில் மதுவோடு அலையும் ஷெரினா... ஓ பிக்பாஸ் வீட்டில் இதெல்லாம் கிடைக்குதா... வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்..!

கையில் மதுவோடு அலையும் ஷெரினா… ஓ பிக்பாஸ் வீட்டில் இதெல்லாம் கிடைக்குதா… வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது கலகலப்பிற்கும், பரபரப்பிற்கும் பஞ்சமில்லாமல் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது. அந்த வகையில் பிக்பாஸ் வீட்டின் முதல் தலைவராக ஜிபி முத்துவும், அதனைத் தொடர்ந்து குயின்ஷியும் இருந்து வருகின்றார்கள். தற்போது மணிகண்டன் இந்தவாரத் தலைவராகி உள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஷெரினா கையில் வைத்திருந்த கிளாஸ் இப்போது இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது. அதாவது ரொபேர்ட் மாஸ்ட்ருக்கும், ரச்சிதாக்கும் இடையில் இடம்பெற்ற செல்லச் சண்டையை கேள்விப்பட்ட ஷெரினா, ராபர்ட் மற்றும் ரச்சிதா சமாதானப்படுத்துகிறார்.

அந்த சமயத்தில் ஷெரினா கையில் ஒரு கிளாஸில் ஏதோ இருக்கிறது அதை குடித்துக்கொண்டே, மாஸ்டர் நீங்க ஒன்னும் ஸ்கூல் பையன் இல்ல, இவ்வளவு பெருசாக வளர்ந்து இருக்கீங்க, இவ்வளவு பெரிய தாடி இருக்கு சாப்பிடமாட்டேன் என்று அடம் பிடித்தால் எப்படி, நீங்கள் சாப்பிடாததால் ரச்சித்தாவும் சாப்பிடாம இருக்காங்க” என்று கூறி இருவரையும் சமாதானப்படுத்த முயன்றார்.

அப்போது ரொபர்ட் மாஸ்டர் ஷெரினா கையில் வைத்திருப்பதை பார்த்து என்ன என கேட்கிறார். அதற்கு ஷெரினா உடனே விஸ்கி என பதில் அளிக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் “என்னது ஷெரினா கையில் வைத்திருப்பது விஸ்கியா? என்றும், அதெல்லாம் பிக் பாஸ் வீட்டில் கிடைக்குதா” என்றும் கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகின்றனர்.

அத்தோடு சனிக்கிழமை எபிசோடில் ஷெரினாவை சரவெடி போல வெடித்து தள்ளிய நம்ம ஆண்டவர், முதல்ல மயங்கி விழுந்தீங்க, பிறகு ஆட வந்தீங்க, அசீம் அத்தனை வெயிட் போட்டு உங்க மேல உக்காந்தது கூட உங்களுக்குப் பிரச்சினையில்லையா” என அடுக்கடுக்கான கேள்விகளினாலே துளைத்தார்.

இதனைத் தொடர்ந்து உண்மையில் ஷெரினாவுக்கு அடிபடவில்லையா ? நடித்தாரா என பலர் ட்ரோல் செய்து வந்த நிலையில் தற்போது கையில் இருப்பது விஸ்கி என கூறி அடுத்த சர்ச்சையில் சிக்கி உள்ளார் ஷெரினா.

Recent News