Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsகுற்றவாளிகளுக்கு அடைக்கலம் - குற்றம் சாட்டும் இந்தியா..!

குற்றவாளிகளுக்கு அடைக்கலம் – குற்றம் சாட்டும் இந்தியா..!

கனடாவில் குடியேறியுள்ள தேடப்படும் குற்றவாளியை கைது செய்யும் பொருட்டு
தகவல் அளிப்பவர்களுக்கு வெகுமதி தொகையை அறிவித்துள்ளது இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பு.

காலிஸ்தான் பிரிவினைவாதியும் இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டவருமான லக்பீர் சிங் சந்து அல்லது லாண்டா என்பவருக்கு எதிராகவே தேசிய புலனாய்வு அமைப்பு புதன்கிழமை வெகுமதி அறிவித்துள்ளது.

இவருடன் மேலும் நால்வர் தொடர்பிலும் வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது.
காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கடந்த ஜூன் மாதம் கனடாவில் முகமூடிதாரிகளான இருவரால் கொல்லப்பட்ட நிலையில், குறித்த கொலைக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் தொடர்பிருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டிய நிலையிலேயே தேசிய புலனாய்வு அமைப்பு தேடப்படும் குற்றவாளிகள் ஐவரின் தகவல்களை வெளியிட்டு வெகுமதியும் அறிவித்துள்ளது.

லக்பீர் சிங் சந்து அல்லது லாண்டா என்பவர் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்தவர்.
தற்போது கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தின் எட்மண்டனில் வசிக்கிறார்.

2017ல் கனடாவுக்கு தப்பிய லாண்டா, பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதி ரிண்டா என்கிற ஹர்விந்தர் சிங் என்பவருடன் இணைந்து செயல்பட்டும் வருகிறார்.
பஞ்சாபில் மட்டும் லாண்டா மீது 18 குற்றவியல் வழக்குகள் பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Recent News