Monday, December 23, 2024

பிரதமர் மோடி தலைமையில் ஷாங்காய் மாநாடு..!முதல் முறையாக பங்கேற்கும் சீன அதிபர்..!

இந்தியா தலைமையில் இடம்பெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள் மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜிங்பிங் பங்கேற்றாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பானது இந்தியா, ரஷ்யா , கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்டு செயற்பட்டு வருகின்றது.

இவ்வாறான சூழலில், இந்த வருடம் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு அமைப்பிற்கு இந்தியா தலைமை வகிப்பதுடன், இந்த கூட்டமைப்பின் மந்திரிகள் மட்டத்திலான மாநாடு இந்தியாவின் பல்வேறு பாகங்களில் நடைபெற்றும் வருகின்றது.

அந்த வகையில், பாதுகாப்புத்துறை, வெளியுறவுத்துறை உட்பட பல்வேறு துறை சார் மந்திரிகளின் மாநாடு நடைபெற்று வருவதுடன் அதில் உறுப்பு நாடுகளை சேர்ந்த மந்திரிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள் மாநாடு எதிர்வரும் 4ஆம் திகதி
நடைபெறவுள்ளதுடன் அதில் இந்த அமைப்பின் உறுப்பினர்களாக உள்ள நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜிங்பிங்கும் காணொளி காட்சி மூலம் பங்கேற்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பிற்கு இந்தியா தலைமையேற்ற பின்னர் இந்த அமைப்பின் மாநாட்டில் சீன அதிபர் பங்கேற்பது இதுவே முதல் தடவையாகும்.

அத்துடன், 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்வான் மோதலுக்கு பின்னர் இந்தியா மற்றும் சீனா இடையிலான உறவில் விரிசல் நிலவி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest Videos