Thursday, January 23, 2025
HomeLatest Newsபாலியல் குற்றச்சாட்டு - மதபோதகருக்கு 8,658 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

பாலியல் குற்றச்சாட்டு – மதபோதகருக்கு 8,658 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

துருக்கியில், பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் மத போதகர் ஒருவருக்கு 8 ஆயிரத்து 658 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அங்காரா நகரைச் சேர்ந்த அட்னான் அக்தார், ஏ9 என்கிற ஆன்லைன் தொலைக்காட்சி சேனல் வழியாக மதப்பிரச்சாரம் நடத்தி வந்தார்.

கடந்த ஆண்டு அவர் மீது பாலியல் வன்கொடுமை, அரசியல் மற்றும் இராணுவ உளவு முயற்சி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் படி 1,075 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், மேல்முறையீட்டில் அக்தார் உட்பட மேலும் 10 பேருக்கு 8,658 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, இஸ்தான்புல் உயர் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Recent News