Saturday, December 28, 2024
HomeLatest Newsகடும் பொருளாதார நெருக்கடி – இலங்கையை மீட்கும் தீவிர நடவடிக்கையில் ரணில்

கடும் பொருளாதார நெருக்கடி – இலங்கையை மீட்கும் தீவிர நடவடிக்கையில் ரணில்

இலங்கையில் நிலவும் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, உலக வங்கியின் பிரதிநிதியுடன் கலந்துரையாடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்போது, ​​நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை குறித்தும், நாட்டில் நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

உலக வங்கி அதிகாரிகளுடன் அரசாங்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னரே இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நிதி நிறுவனங்களுடன் தொடர்பு கொள்வது இது முதல் தடவையல்ல என தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளருடன் தாம் பேச்சுவார்த்தை நடத்தியதாக நாடாளுமன்றத்தில் ரணில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recent News