Wednesday, January 22, 2025
HomeLatest Newsஎலான் மஸ்க் உத்தரவால் நீக்கப்பட்டசேவை! இலட்சக்கணக்கானோர் அதிர்ச்சி

எலான் மஸ்க் உத்தரவால் நீக்கப்பட்டசேவை! இலட்சக்கணக்கானோர் அதிர்ச்சி

டுவிட்டரில் இருந்து தற்கொலை தடுப்புக்கான சிறப்பு ஹேஷ்டேக் சேவை லான் மஸ்க் உத்தரவால் நீக்கியமை இலட்சக்கணக்கானோரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

தற்கொலை தடுப்பு மற்றும் பிற பாதுகாப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் அம்சம் கொண்ட சேவை ஒன்றை டுவிட்டரானது நீக்கியுள்ளது. டுவிட்டரின் புதிய உரிமையாளரான மஸ்க்கின் உத்தரவின் பேரிலேயே இது செயல்படுத்தப்பட்டு உள்ளது என டுவிட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

#ThereIsHelp

பல்வேறு நாடுகளை சேர்ந்த மனநலம், எச்.ஐ.வி., தடுப்பூசிகள், குழந்தை பாலியல் சுரண்டல், கொரோனா பெருந்தொற்று, பாலின அடிப்படையிலான வன்முறை, இயற்கை அனர்த்தங்கள் மற்றும் கருத்து சுதந்திரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களுடன் தொடர்புடைய சேவை அமைப்புகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அவர்களை தொடர்பு கொள்வதற்கான குறிப்பிட்ட தேடுதல்களை மேற்கொள்ள இந்த ஹேஷ்டேக் பயனளித்து வந்தது.

இந்த சேவை கடந்த 2 நாட்களாக டுவிட்டரில் இல்லாதது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. டுவிட்டரில் வெறுக்கத்தக்க பேச்சு, குழந்தைகள் சித்திரவதை, தற்கொலை போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு குழு என்கிற ஆலோசனை குழு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது.

வெறுப்பு, துன்புறுத்தல் மற்றும் பிற தீங்குகளை டுவிட்டர் எவ்வாறு சிறப்பாக எதிர்த்து போராட முடியும் என்பதற்கான நிபுணத்துவம் மற்றும் வழிகாட்டுதலை இக்குழு வழங்கி வந்தது.

இந்நிலையில், ஆபத்தில் உள்ள இலட்சக்கணக்கான மக்களுக்கு பயனளிக்க கூடிய டுவிட்டரின் சிறப்பு ஹேஷ்டேக் சேவையை தற்போது எலான் மஸ்க் உத்தரவின்பேரில் நீக்கியுள்ளமை கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு உள்ளது.

Recent News