Wednesday, December 25, 2024
HomeLatest Newsதாய்லாந்தில் தொடர் குண்டு வெடிப்பு; கோட்டாவின் பாதுகாப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

தாய்லாந்தில் தொடர் குண்டு வெடிப்பு; கோட்டாவின் பாதுகாப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

தாய்லாந்தில் பல்வேறு குண்டுத்தாக்குதல்கள் மற்றும் தீ வைப்பு சம்பவங்கள் இடம்பெற்ற போதிலும் அந்த நாட்டில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ச நாட்டின் மத்திய பகுதியான தலைநகர் பாங்கொக்கில் தங்கியுள்ள நிலையில், இந்த தாக்குதல்கள் தாய்லாந்தின் தென் பகுதியில் இடம்பெற்றுள்ளன.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பு கூற வேண்டியவர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி பதவியில் இருந்து விலக வேண்டும் என கோரி, பல்வேறு பாரிய அரச எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதை அடுத்து கோட்டாபய ராஜபக்ச நாட்டில் இருந்து வெளியேறியிருந்தார்.

சிங்கபூரில் தங்கியிருந்த நிலையில், பதவி விலகிய கோட்டாபய ராஜபக்ச ஒரு வாரத்திற்கு முன்னரே தாய்லாந்தை சென்றடைந்திருந்ததுடன், பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிடங்களுக்கு செல்ல வேண்டாம் என அதிகாரிகள் அவருக்கு அறிவுறுத்தியிருந்தனர்.

இந்த நிலையிலேயே தாய்லாந்தின் தென் பகுதியில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

Recent News