Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsஇம்ரான் கானுக்கு தனி சிறை - கொந்தளித்த ஆதரவாளர்கள்..!

இம்ரான் கானுக்கு தனி சிறை – கொந்தளித்த ஆதரவாளர்கள்..!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.


அவரை தனிமை சிறைக்கு மாற்றியதற்கு அவரது ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் அவர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டது.

இதனால் இம்ரான்கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இஸ்லாமாபாத் செசன்ஸ் கோர்ட்டு உத்தரவிட்டது.இதனையடுத்து இம்ரான்கான் கைது செய்யப்பட்டு லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டார்.


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதற்கிடையே தனிமைச்சிறைக்கு இம்ரான்கானை மாற்றி உள்ளதாக தகவல் வெளியானது.


ஆனால் அவரது உடல்நிலை குறித்து கவலை தெரிவித்துள்ள தெஹ்ரீப் இ இன்சாப் கட்சியினர் அரசின் இந்த முடிவுக்கு தங்களது கடுமையான எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.


மேலும் கோர்ட்டு நடவடிக்கைகளுக்காக வழக்கறிஞர்கள் அவரை சந்திப்பதற்கு கூட அதிகாரிகள் அனுமதிக்கவில்லை எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர். இதனால் அங்கு மீண்டும் ஒரு கலவரம் ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.

Recent News