Tuesday, December 24, 2024
HomeLatest Newsநத்தார் தினத்தை முன்னிட்டு தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

நத்தார் தினத்தை முன்னிட்டு தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

இந்த ஆண்டு நத்தார் தினத்தை முன்னிட்டு, கிறிஸ்தவ தேவாலயங்களில் நடத்தப்படும் விசேட திருப்பலி ஒப்புக்கொடுத்தல் ஆராதனைகளின் போது, தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்புக்களை வழங்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நாட்டிலுள்ள அனைத்து தேவாலயங்களிலும் உள்ள அருட்தந்தைகளை சந்தித்து காவல்துறையினர் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர்.

இதன் போது அவர்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குமாறு, காவல்துறை மா அதிபர், அனைத்து காவல் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதேவேளை, நத்தார் காலப் பகுதியில் தேவாலயங்களில் உள்ளவர்களின் ஒத்துழைப்புடன், தேவாலயத்திற்கு வருகைத் தரும் சந்தேகத்திற்கிடமானோரை அடையாளம் காணப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் காவல்துறையினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Recent News