பாக்கிஸ்தான் பிரதமர் அறையில் இருந்து முக்கிய அரசு விடயங்கள் கலந்துரையாடப்படும் audio கள் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.
கடந்த வாரம் முழுதும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இவ்வாறு வெளியாகியுள்ள audio க்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும், பாக்கிஸ்தான் சைபர் பாதுகாப்பு நிலையை ஸ்திரப்படுத்துமாறும் பாக்கிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் மற்றும் ராணுவ தலைவர்கள் உள்ளடங்கிய உயர் பாதுகாப்பு கமிட்டி ஒன்றுகூடி பிரதமர் அலுவலகம் மற்றும் முக்கிய அரசாங்க அலுவலகங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பலப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
கடந்த செப்டம்பர் 24ஆம் திகதி முதலாவதாக சில ஓடியோக்கள் வெளியாகியிருந்த நிலையில் தொடர்ந்து இவ்வாறான ஓடியோக்கள் பிரதமர் அறையில் இருந்து வெளிவந்து சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை உருவாக்கி இருந்தது.
இதில் குறித்த ஒரு காணொளி இல் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி உபதலைவர் மரியம் நவாஸ் ஷெரீப் பேசுவது பதிவு செய்யப்பட்டுள்ளது.