Sunday, January 26, 2025
HomeLatest Newsசீசன் 6 பிக் பாஸ் வீடு நவீன அரண்மனை..! வைரலாகும் புகைப்படங்கள்..!

சீசன் 6 பிக் பாஸ் வீடு நவீன அரண்மனை..! வைரலாகும் புகைப்படங்கள்..!

ஸ்டார் விஜய் சேனலின் பிக் பாஸ் அனைத்து காலத்திலும் மிகவும் பிரபலமான தமிழ் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாகும். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய, பிக் பாஸ் தமிழ் ஐந்து வெற்றிகரமான சீசன்களைக் கொண்டுள்ளது, மேலும் ஆறாவது சீசன் அக்டோபர் 9, ஞாயிற்றுக்கிழமை மாலை 06.30 மணிக்கு பிரம்மாண்டமான திரைச்சீலை எழுப்பும் நிகழ்வுடன் தொடங்க உள்ளது. அறிக்கையின்படி, இந்த சீசனில் 21 போட்டியாளர்கள் உள்ளனர்.

பிக்பாஸ் வீட்டின் புதிய புகைப்படங்கள் இன்று இணையத்தில் வெளியாகி இருப்பது ஹாட் நியூஸ். இந்த புகைப்படங்களில் இருந்து பிக்பாஸ் வீடு இந்த முறை பிரமாண்டமாக உள்ளது என்பது தெளிவாகிறது. இம்முறை வட்ட வடிவிலான் சாப்பாட்டு மேசை மற்றும் நாற்காலிகளை கண்ணாடி மெட்டீரியல் கொண்டு தயாரித்துள்ளனர் தயாரிப்பாளர்கள். வடிவமைப்பு அழகாக இருந்தாலும், அனைத்து போட்டியாளர்களும் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிட முடியாத அளவுக்கு சிறியதாக தெரிகிறது.

கடந்த சில சீசன்களாக நீச்சல் குளம் இல்லாத நிலையில், இம்முறை வீட்டின் வடிவமைப்பில் நீச்சல் குளமும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் நீச்சல் குளம் சம்பந்தப்பட்ட டாஸ்க்குகளை பிக் பாஸ் கொடுக்கலாம் ,அத்துடன் வித்தியசான முறையில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வீடு முழுவதும் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. குளியலறை வடிவமைப்புகள் மற்றும் கண்ணாடிகள் கூட கண்கவர் வண்ண வேலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.60 க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொறுத்தப்பட்டிருக்கின்றன.இம்முறை போட்டியாளர்கள் தப்பித்து போவார்கள் என எண்ணி முள்,வேலிகள் எதுவும் அமைக்கப்படவில்லை.

வாக்குமூலம் அறை மற்றும் படுக்கையறை ஆகியவை இந்த நேரத்தில் மிகவும் கலை வடிவமைப்புகளைக் கொண்டுள்ளன. படுக்கையறையில் டூ சைட் மெத்தைகளைக் கொண்ட 10 படுக்ககைகள் காணப்படுகிறன. .படுக்கையறையில் உள்ள சுவரில் ஒரு பெண்ணின் கண்களை வசீகரிக்கும் படம் பொருத்தப்பட்டது, கூரையில் அற்புதமான அலங்கார விளக்குகள் உள்ளன. வாக்குமூலம் அறை பல ஆக்கப்பூர்வமான வடிவமைப்புகளைக் கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு சிறை கூண்டு வடிவில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

பிக் பாஸ் சீசன் 6 வீடு முந்தைய சீசனின் வீடுகளை விட பிரமாண்டமாகவும் அழகாகவும் இருக்கும்என இந்தப் புகைப்படங்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.

Recent News