Thursday, January 23, 2025
HomeLatest Newsஎரிபொருள் நிரப்பு நிலையத்தில் பஸ்ஸை திருடிச் சென்ற பாடசாலை மாணவர்கள்

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பஸ்ஸை திருடிச் சென்ற பாடசாலை மாணவர்கள்

ஹோமாகம – கலவிலவத்தை பிரதேச எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்கு முன்பாக வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பஸ் ஒன்றை திருடிச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் 15 வயதுடைய இரு பாடசாலை மாணவர்களை சந்தேகத்தின் பேரில் ஹோமாகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் மத்தேகொட பிரதேசத்தில் வசிக்கும் 15 வயதுடைய பாடசாலை மாணவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ் ஹோமாகமவில் ஓரிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், பஸ்ஸின் சாரதி வயது குறைந்தவர் என்பதை அங்கிருந்த ஒருவர் அவதானித்து அவரிடம் சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளதா எனக் கேட்டுள்ளார்.

அப்போது அவரிடம் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை என்பது தெரிய வந்ததையடுத்து பஸ்ஸின் உரிமையாளருக்கு வேறொருவர் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, பஸ்ஸின் உரிமையாளர் பொலிஸாருடன் சம்பவ இடத்துக்குச் சென்று வந்து பஸ்ஸை கைப்பற்றியதுடன் சந்தேக நபர்களையும் அழைத்துச் சென்றனர்.

Recent News