Thursday, January 23, 2025
HomeLatest NewsIndia Newsபாடசாலை மாணவர்கள் பேரூந்துகளில் பயணம் செய்வது இலவசம்..!போக்குவரத்துத்துறை அதிரடி..!

பாடசாலை மாணவர்கள் பேரூந்துகளில் பயணம் செய்வது இலவசம்..!போக்குவரத்துத்துறை அதிரடி..!

பள்ளி சீருடையில் வரும் மாணவர்களை அரசு பேரூந்துகளில் இலவச பயணம் செய்வதற்கு அனுமதிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

தரம் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடசாலைகள் வரும் ஜூன் மாதம் 7 ஆம் திகதி முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அனைத்து மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் ‘ஸ்மார்ட் கார்டாக’ ஜூன் அல்லது ஜூலை மாத இறுதிக்குள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாடசாலை சீருடையில் வரும் மாணவர்களை அரசு பேரூந்துகளில் இலவச பயணம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.

கடந்த கல்வி ஆண்டில் வழங்கப்பட்ட கட்டணமில்லா பஸ் பயண அட்டையை காண்பித்தும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணம் மேற்கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

அது மட்டுமன்றி, சீருடை அணிந்திருந்தாலோ அல்லது அடையாள அட்டைகள் வைத்திருக்கும் மாணவர்களை பேரூந்திலிருந்து இறக்கி விடப்பட்டாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கட்டணமில்லா புதிய பஸ் பயண அட்டை வழங்கும் பணிக்கான கால அளவை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News