Friday, November 15, 2024
HomeLatest Newsஇனி 2 வயதில் பாடசாலைக் கல்வி..!பிரான்ஸ் ஜனாதிபதியின் அதிரடித் திட்டம்..!

இனி 2 வயதில் பாடசாலைக் கல்வி..!பிரான்ஸ் ஜனாதிபதியின் அதிரடித் திட்டம்..!

பிரான்ஸில் பிள்ளைகள் பாடசாலை படிப்பினை இரண்டு வயது முதல் ஆரம்பிக்கும் வகையிலான புதிய திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

அந்த வகையில்,பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனே இந்த யோசனையை முன்மொழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்சேய்(Marseille) நகருக்கு மூன்று நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், இந்த யோசனையினை அங்கு அறிவித்துள்ளார்.

அந்த அடிப்படையில், ஆரம்ப பாடசாலை (l’école maternelle) கல்வியை விரும்பினால் இரண்டு வயது முதலே ஆரம்பிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமன்றி, 2027 ஆம் ஆண்டு முதல் அதற்குரிய வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி தரமுடியும் எனவும் ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்துள்ளார்.

மேலும், அதன் முதற்கட்டமாக நெருக்கமாக சனத்தொகை கொண்ட நகரங்களில் இந்த பாடசாலைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News