நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றும் பொறுப்பு எங்கள் அனைவருக்கும் உள்ளது.அதனை விரைந்து செயற்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதியும்,நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்:
இன்றய அரசியல் நிலவரம் மற்றும் 19ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் பாராளுமன்றதில் தற்போது ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
பொருளாதார நெருக்கடி, அரசாங்கத்திடம் நிதிப் பற்றாக் குறை, விவசாயிகளுக்கு உரம் வழங்காமை ,தொடர்பான பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறது.ஆகவே நாம் அரசாங்கத்தின் நிலைப்பாடுகளை உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம்.
அரசாங்கத்திடம் நிதி இல்லை என்பது வேறு பிரச்சினை.விவசாயிகளுக்கு தேவையான அளவு உரம் வழங்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 1000 கிலோ கிராம் தேவை என்றால் 100 கிலோ உரத்தை வழங்கி என்ன பயன்.
இன்றய அரசியல் நிலவரப்படி உடன் தேர்தல் நடைபெற வேண்டும்.அவ்வாறு தேர்தல் நடந்தால் எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்வு வரும். இல்லை என்றால் மக்கள் வீதிக்கும் வீட்டுக்கும் வருவார்கள் என்பதை அனைவரும் அறிந்திருப்பார்கள் என்றார்.