Wednesday, December 25, 2024
HomeLatest Newsவைப்புத் தொகையை மேலும் ஒருவருடம் நீடித்தது சவுதி

வைப்புத் தொகையை மேலும் ஒருவருடம் நீடித்தது சவுதி

பாக்கிஸ்தான் வங்கிகளில் பண வைப்பை மேற்கொண்டிருந்த சவுதி  அரசு அதன் வைப்புக் காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

பாக்கிஸ்தான் வங்ககளில் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை வைப்பு செய்திருந்த நிலையில் அதன் முதிர்வு காலம் இந்த வருடம் எனவும் ஆனால் தற்போது பாக்கிஸ்தானின் பொருளாதார நெருக்கடி காரணமாக பாக்கிஸ்தானில் டொலரின் வீழ்ச்சி மற்றும் டொலரின் வருகை மிகவும் குறைவடைந்து செல்லும் நிலையில் சவுதி பாக்கிஸ்தான் வங்கிகளில் வைப்புச் செய்த  பணத் தொகையை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிப்பு செய்து பாக்கிஸ்தானின் பொருளாதாரத்திற்கு உதவி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாக்கிஸ்தான் அமெரிக்க டொலரின் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என சர்வதேச அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.

Recent News