தென்னாப்பிரிக்கா இணையமூடாக முன்னெடுக்கும் BRICS உச்சி மாநாட்டில் இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடர்பில் விவாதிக்கப்பட உள்ளது. இந்த நிலையிலேயே இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதியை கைவிட வேண்டும் என்று அனைத்து நாடுகளுக்கும் சவுதி பட்டத்து இளவரசர் கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும், பாலஸ்தீன அரசை நிறுவுவதற்கு தீவிரமான மற்றும் விரிவான அமைதி செயல்முறையைத் தொடங்க வேண்டும் என்று சவுதி அரேபியா கோருவதாக பட்டத்து இளவரசர் சல்மான் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி சவுதி அரேபியாவின் நிலை என்பது நிலையானது மற்றும் உறுதியானது எனவும், இரு நாடு தீர்வு தொடர்பான சர்வதேச முடிவுகளை நடைமுறைப்படுத்துவதைத் தவிர பாலஸ்தீனத்தில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை அடைய வழி இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காஸா பகுதியில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை ஏற்றுக்கொள்வதாக இல்லை என்றும், உடனே நிறுத்தப்பட வேண்டும் என்றும் இளவரசர் சல்மான வலியுறுத்தியுள்ளார்.