Friday, May 3, 2024
HomeLatest Newsவெள்ளை உடையுடன் கொழும்பில் சத்தியாக்கிரக போராட்டம் இன்று !

வெள்ளை உடையுடன் கொழும்பில் சத்தியாக்கிரக போராட்டம் இன்று !

ஐக்கிய தேசியக் கட்சி ஏற்பாடு செய்துள்ள சத்தியாக்கிரகப் போராட்டமானது இன்றைய தினம் பி.ப 3.00 மணி
அளவில் கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் இடம்பெறவுள்ளது .

நாட்டினை அதால பாதாளத்தில் இருந்து மீட்பதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற நம்பிக்கையுடன் இந்த சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இப்போராட்டத்தில் கட்சி பாகுபாடின்றி வெள்ளை ஆடை அணிந்து கலந்துகொள்ளுமாறு அனைத்து தரப்பினருக்கும் பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார் .

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம், தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் தேசிய கொள்கையொன்றை உருவாக்குமாறு கோரிக்கை விடுமாறு இந்த வெள்ளை உடை போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Recent News