Wednesday, December 25, 2024
HomeLatest Newsபொருளாதாரத் தடைகளால் ரஷ்யாவை மண்டியிட வைக்க முடியாது! – பதில் ஜனாதிபதி

பொருளாதாரத் தடைகளால் ரஷ்யாவை மண்டியிட வைக்க முடியாது! – பதில் ஜனாதிபதி

ரஷ்யாவிற்கு எதிராக உலக நாடுகளின் பொருளாதாரத் தடைகள் மூன்றாம் தரப்பு நாடுகளை மண்டியிட வைத்துள்ளது என பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளால் ஒருபோதும் ரஷ்யா மண்டியிடாது என்றும் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

ரஷ்யா உடனடியாக போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்காமல் பேச்சுக்கு உக்ரைன் தயாராக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த மோதல் காரணமாக முழு உலகையும் பிணைக் கைதிகளாக வைத்திருக்க முடியாது எனவே உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Recent News