Sunday, April 20, 2025
HomeLatest Newsகொழும்பில் ஒன்றுகூடவுள்ள சஜித் தரப்பு.

கொழும்பில் ஒன்றுகூடவுள்ள சஜித் தரப்பு.

பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கும் பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பொன்று கொழும்பில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த வீரசுமன வீரசிங்க இன்றைய தினம் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட ஏனைய கட்சிகளுடனும் கலந்துரையாடுவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.

இதேவேளை தற்போது இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குவதற்கான யோசனை தொடர்பில் இதன் போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் அங்கம் வகிக்கும் வீரசுமன வீரசிங்க தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றில் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் நாளையதினம் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் பாராளுமன்ற அமர்வில் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recent News